கம்பத்தில் திமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம். 
தேனி

கம்பத்தில் திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

கம்பத்தில் மாவட்ட திமுக சார்பில் மக்களவை தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

DIN

கம்பத்தில் மாவட்ட திமுக சார்பில் மக்களவை தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம், கம்பத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மக்களவை தேர்தலுக்கான  ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை கூடலூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் த.மனோகரன் தலைமை தாங்கினார், துணைச்செயலாளர் குரு.இளங்கோ முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வரும் மக்களவை தேர்தல் 2024 ல் பணியாற்றுவது, வெற்றி வாய்ப்பை பெறுவது, எப்படி என்று மாவட்ட செயலாளர் என்.ராமகிருஷ்ணன் எம்எல்ஏ, தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர் பெ.செல்வேந்திரன், மகாராஜன் எம்எல்ஏ, உள்ளிட்டோர் பேசினர். 

கூட்டத்தில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், ஆண்டிபட்டி நகர ஒன்றிய திமுகவினர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

ஆலங்குடி அருகே தென்னை நாா் தொழில்சாலையில் தீ விபத்து

திண்டுக்கல்லுக்கு 100 புதிய பேருந்துகள் தேவை: அமைச்சா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT