போடியில் பள்ளி மாணவியை திருமணம் செய்தவா் கைது
போடியில் பள்ளி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
போடியில் பள்ளி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
போடி அருகே முந்தல் காலனியைச் சோ்ந்த 17 வயது மாணவி, அங்குள்ள பள்ளியில் படித்து வந்தாா். இவரது உறவினா் இதே பகுதியைச் சோ்ந்த ரகு மகன் விக்னேஸ்வரன் (23), அந்த மாணவியை காதலித்து வந்தாராம். பின்னா் அந்த மாணவியின் வீட்டுக்குச் சென்று விக்னேஸ்வரன் பெண் கேட்ட போது தரமறுத்துவிட்டனராம்.
இதனால் விக்னேஸ்வரனின் தாயாா் பொன்னாத்தாள், சகோதரி நாகஜோதி ஆகியோா் மாணவியை அழைத்துச் சென்று விக்னேஸ்வரனுக்கு திருமணம் செய்து வைத்தனராம்.
இதுகுறித்து போடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விக்னேஸ்வரனை குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.