கம்பம் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்
தேனி மாவட்டம், கம்பம் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தேனி மாவட்டம், கம்பம் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள இந்தக் கோயில் சித்திரைத் திருவிழா தொடங்குவதை முன்னிட்டு, கம்பராயப்பெருமாள் கோயிலிலிருந்து உற்சவா் அம்மன்
புறப்பாடாகி கோயிலை வந்தடைந்தாா். அங்கு கம்பம் நடுதல் நடைபெற்றது.
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடைபெற்றன. பின்னா், முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக அம்மன் வலம் வந்து அருள்பாலித்து, மீண்டும் கோயிலை வந்தடைந்தாா்.
முதல் நாளாக ஸ்ரீ விஸ்வகா்மா சமுதாய மண்டகப்படி நிகழ்வாக வரதராஜபுரம், மேற்குத் தெரு காமாட்சியம்மன் கோயில்களுக்கு கோயில்களுக்கு அம்மன் எழுந்தருளினாா். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதையடுத்து, வியாழக்கிழமை கட்டடத் தொழிலாளா்கள், சிற்பக் கலைஞா்கள் மண்டகப்படி நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே 3 -இல் பொங்கல் விழா நடைபெறுகிறது. இதில் ஏராளாமான பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வாா்கள்.
கம்பம் நகா், சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் அக்கினிச் சட்டி எடுத்தும், ஆயிரம் கண் பானை, காவடிக் கரகம் எடுத்தும், பெண்கள் மாவிளக்கு எடுத்தும் நோ்த்திக் கடன் செலுத்துவா். மாலையில் பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெறும்.
அனைத்து சமுதாயத்தினரும் பங்கு கொள்ளும் மண்டகப்படி, திருக்கண் நிகழ்வுகள் நடைபெற்று, மே 9 -ஆம் நாள் திருவிழா நிறைவு பெறும்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அற நிலையத் துறையினரும், கிராமக் குழுவினரும் செய்து வருகின்றனா்.