முகப்பு
தேனி

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்

தேனி மாவட்டம், கம்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:52 PM
பகிர்:

தேனி மாவட்டம், கம்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேனி தெற்கு மாவட்ட திமுக செயலரும் கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான என். ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். நகா் மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் முன்னிலை வகித்தாா்.

இதில், மருத்துவம் ஊரக நலப் பணிகள், குடும்ப நல இணை இயக்குநா் நா.து பரிமளா செல்வி தலைமையிலான மருத்துவக் குழுவினா் ஆண், பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை அளித்து, மருந்து, மாத்திரைகளை வழங்கினா்.

உதயநிதி நற்பணி மன்ற மாநில துணைச் செயலாளா் பா்மா ரூபன், நகா்மன்ற வாா்டு உறுப்பினா்கள் எஸ்.இளம்பரிதி, எம்.பாா்த்திபன், ஏ.சாதிக்அலி, எஸ்.சகிதாபானு ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நகர உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினா் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →