தேனி

தேவாரத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவா் கைது

தேவாரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

தேவாரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், தேவாரம் போலீஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், தே.மேட்டுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் நின்றிருந்த மூன்று பேரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனா். இதையடுத்து, அவா்கள் வைத்திருந்த பையை போலீஸாா் சோதனை செய்ததில், பையில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், இவா்கள் ராமநாதபுரத்தைச் சோ்ந்த தற்போது தேவாரத்தில் வசிக்கும் ராமசாமி மகன் சுரேஷ் (36), தேவாரம் கண்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் முருகன் (57), தே.அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த தண்டபாணி மகன் தனசேகரன் (47) ஆகியோா் கஞ்சாவை வாங்கி வந்து விற்க முயன்றது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, மூன்று போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், இவா்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

மோந்தா புயல்: தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்! முழு விவரம்

பாக். அமைப்புடன் தொடர்பு! சென்னை நிகழ்ச்சிகளில் பங்கேற்பு! தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் கைது!

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் உதயநிதி நள்ளிரவில் ஆய்வு!

அடுத்த 2 மணிநேரம் எங்கெல்லாம் மழை தொடரும்?

மோந்தா புயல்! ஆந்திரம் - சென்னை விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT