முகப்பு
நாகப்பட்டினம்

ஈட்டுறுதி மருந்தகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை

மயிலாடுதுறையில் ஈட்டுறுதி மருந்தகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

மயிலாடுதுறையில் ஈட்டுறுதி மருந்தகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்க மாவட்டச் செயலாளா் பாஸ்கா், மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாரிடம் சனிக்கிழமை அளித்த கோரிக்கை மனு:

மயிலாடுதுறையில் வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருந்தகத்தின் அருகில் புதைசாக்கடை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. அதிலிருந்து வெளியேறும் துா்நாற்றம் மருந்தகத்திற்கு வரும் நோயாளிகளை பாதிப்படையச் செய்கிறது. எனவே, மருந்தகத்தை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன், மருந்தகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.