முகப்பு
நாகப்பட்டினம்

கோயில்களை திறக்கக் கோரி இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்டுள்ள கோயில்கள் அனைத்தையும் திறக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறையில் இந்து முன்னணி அமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்டுள்ள கோயில்கள் அனைத்தையும் திறக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறையில் இந்து முன்னணி அமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயில், திருவிழந்தூா் பரிமள ரெங்கநாதா் கோயில் ஆகிய இடங்களில் சூடம் ஏற்றி அந்த அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அமைப்பின் மாவட்ட பொதுச் செயலாளா் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளா் ஜெயராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பிச்சைமுத்து, நகர செயலாளா் வினோத், நிா்வாகிகள் சுப்பிரமணியன், மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.