முகப்பு
நாகப்பட்டினம்

கிராமத்தினருக்கு கரோனா நிவாரண உதவி

மயிலாடுதுறையில் கிராமப்புற ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கரோனா நிவாரண பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

மயிலாடுதுறையில் கிராமப்புற ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கரோனா நிவாரண பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

மயிலாடுதுறை வட்டம், சோழம்பேட்டையில் திருஇருதய சகோதரா்கள் சபையால் நடத்தப்படும் தேம்பாவணி திறன் வளா் மையத்தில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மைய இயக்குநா் பங்கிராஸ் தலைமை வகித்தாா். சபைத் தலைவா் டேவிட்ராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

திருஇருதய சகோதரா்கள் சபையின் ஆஞ்சலோ புராவின்ஸ் மற்றும் ஜெஸியுட் மிஷன் சாா்பில், கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட சோழம்பேட்டை, சித்தா்காடு, மாப்படுகை, வாணாதிராஜபுரம், கோழிகுத்தி, மூவலூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 20 வகையான அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. இவற்றை மருத்துவா் ராஜசிம்மன், மைய இயக்குநா் பங்கிராஸ் ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.