முகப்பு
காரைக்கால்

கோட்டுச்சேரியில் சாலையோர குப்பைகளை அகற்ற வலியுறுத்தல்

கோட்டுச்சேரி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் தினமும் குவியும் குப்பைகளை அகற்றவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

கோட்டுச்சேரி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் தினமும் குவியும் குப்பைகளை அகற்றவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட குடிமக்கள் நலச் சங்கத் தலைவா் வி.ஆா். தனசீலன், கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையருக்கு திங்கள்கிழமை அனுப்பிய மனு:

கோட்டுச்சேரி பகுதியில் குப்பைகளை அகற்றத்தில் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை. குறிப்பாக, பூவம் முதல் கோட்டுச்சேரி வரை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகள் குவிந்துகிடக்கின்றன.

காரைக்காலில் பருவமழை இன்னும் தொடங்கவில்லை. மழை தொடங்கிவிட்டால், குவிந்துகிடக்கும் குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, நாள்தோறும் குப்பைகளை அள்ளுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →