மயிலாடுதுறையில் சிவாஜிகணேசனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சிவாஜி மன்றம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள். 
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் காங்கிரஸ் சார்பில் சிவாஜி பிறந்தநாள் விழா

மறைந்த நடிகர் செவாலியே சிவாஜிகணேசனின் 94-வது பிறந்தநாள்விழா மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.  

DIN

மறைந்த நடிகர் செவாலியே சிவாஜிகணேசனின் 94-வது பிறந்தநாள்விழா மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சிவாஜி மன்ற மாநில சமூக நலப்பேரவை மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமை வகித்தார். காங்கிரஸ் நகர தலைவர் ராமானுஜம் வரவேற்றார். 
சிவாஜி மன்ற பொறுப்பாளர் என்.எஸ்.ராஜேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், ஆசிரியர் மன்ற மாநில வெளியீட்டுச் செயலாளர் ஜெக.மாணிக்கவாசகம், மிலிட்டரி செல்வராஜ், பூவாலை மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜிகணேசனின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில், நாட்டுப்புறக் கலைஞர் கிங்பைசல் சிவாஜி கணேசனின் வேடமணிந்து மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்து பங்கேற்றார். முடிவில், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கமலநாதன் நன்றி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமோ பாரத் ரயில்களில் பிறந்தநாள்களை கொண்டாட என்சிஆா்டிசி ஏற்பாடு

15 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை: 2 சிறாா்களுக்கு போலீஸாா் வலை

பூதமங்கலம் தா்கா சந்தனக் கூடு விழா கொடியேற்றம்

தாயின் பெயரில் மரக்கன்றுகள் நட்ட மாணவா்கள்

வீட்டின் கதவை உடைத்து லாக்கருடன் 22 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT