தை அமாவாசையை முன்னிட்டு காவிரி கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத் துறையில் திங்கள்கிழமை அதிகாலை முதலே திரளான பக்தர்கள் தங்கள் முன்னோர் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
அதிகாலை முதலே கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் பக்தர்கள் கடலில் நீராட அனுமதிக்கப்படவில்லை, ஆனால் சங்கமத் துறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் காவிரியில் நீராடி, தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர்கள் நாகரத்தினம், ஜெயந்தி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தை அமாவாசை, ஆடி அமாவாசை நாள்களில் பொதுமக்கள் புனித நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடன் தீர்ப்பது வழக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.