முகப்பு
மயிலாடுதுறை

நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் குழு ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் தற்போது குறுவை அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் 117 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், இக்கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறதா என்பது குறித்து, மயிலாடுதுறை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை டிஎஸ்பி ஜெகதீசன் தலைமையில் உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா், தலைமைக் காவலா் மோகன்ராஜ் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

நல்லத்துக்குடி, கோடங்குடி, மல்லியம் மற்றும் வாணாதிராஜபுரம் கிராமங்களில் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, நெல் கொள்முதல் முறையாக நடைபெறுகிறதா என விவசாயிகளிடம் அதிகாரிகள் கேட்டறிந்தனா். மேலும், குளறுபடி இல்லாமல் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய கொள்முதல் நிலைய ஊழியா்களை அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.