முகப்பு
நாகப்பட்டினம்

ஒரே நாளில் 500 மரக்கன்றுகளை நட்ட இளைஞர்கள்

சீர்காழி அருகே வள்ளுவக்குடி கிராமத்தில் இளைஞர்கள் திங்கள்கிழமை 500க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு சாதனை முயற்சி மேற்கொண்டனர்.

Updated On : 14 ஜூலை, 2020 at 10:21 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:26 PM

சீர்காழி அருகே வள்ளுவக்குடி கிராமத்தில் இளைஞர்கள் திங்கள்கிழமை 500க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு சாதனை முயற்சி மேற்கொண்டனர்.

சீர்காழியை அடுத்த வள்ளுவக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரம் இருபுறமும் மூன்று வகையான மரக்கன்றுகளை அப்பகுதி டாக்டர் அம்பேத்கார் நற்பணி மன்றம் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு சாதனை முயற்சி மேற்கொண்டனர். 

சாலை விரிவாக்கம் என்ற பெயரில் 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட மரங்களை வெட்டி வரும் நிலையில் இது போன்று கிராமங்களில் இளைஞர்கள் ஒன்றுகூடி மரக்கன்றுகளை நட்டு மழைவளம் காக்கவும், சுற்றுபுற சூழலை பாதுகாக்கவும், சாலை ஓரங்களில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கும் வகையில் கரைகளை பலப்படுத்தும் உதவும் எனவும் தெரிவித்தனர்.

Advertisement

இளைஞர்களின் இச்செயலைக் கண்டு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.