சீர்காழியில் தலைமை மருத்துவமனை அமைக்க சிறப்பு அதிகாரியிடம் கோரிக்கை
புதிய மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரி அல்லது மாவட்ட தலைமை மருத்துவமனை என ஏதாவது ஒன்றை சீர்காழியில் அமைத்திட வேண்டும் என
புதிய மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரி அல்லது மாவட்ட தலைமை மருத்துவமனை என ஏதாவது ஒன்றை சீர்காழியில் அமைத்திட வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட தனி அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட தனி அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள லலிதா வினை சீர்காழி நலம் பாரம்பரிய அறக்கட்டளையினர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அவர்கள் அளித்தனர்.
அந்த மனுவில் சீர்காழியை தலைமை இடமாக கொண்டு தனி வருவாய் கோட்டம் அமைக்க வேண்டும், கொள்ளிடத்தை தலைமை இடமாக கொண்டு தனி தாலுக்கா அமைத்திட வேண்டும், மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள மருத்துவ கல்லூரியையோ அல்லது மாவட்ட தலைமை மருத்துவமனையையோ சீர்காழியில் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
Advertisement
அறக்கட்டளை செயலர் சுதாகர், சட்ட ஆலோசகர் சுந்தரய்யா, செயற்குழு உறுப்பினர்கள் அப்பாஸ் அலி, சுரேஷ்குமார், ராஜசேகர், ரவி, சுரேஷ், அன்பு ஆகியோர் தனி அதிகாரியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.