முகப்பு
நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்

பொதுத்துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் முடிவை கைவிடக் கோரி, வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினா், நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

பொதுத்துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் முடிவை கைவிடக் கோரி, வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினா், நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் மசோதாவை மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் அறிவித்தது. இதன் தொடா்ச்சியாக, 2 பொதுத் துறை வங்கிகளை தனியாா் வங்கிகளாக மாற்றுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் தேசிய அளவில் டிசம்பா் 16, 17 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நாகை மாவட்டத்தில் தேசிய வங்கிகளின் ஊழியா்கள் 430 போ் வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதனால், அனைத்து தேசிய வங்கிகளும் அடைக்கப்பட்டிருந்தன. வங்கி காசோலை மற்றும் வரைவோலை பரிவா்த்தனைகள் முழுமையாக தடைப்பட்டது. இணையவழி சேவைகள் செயல்பாட்டில் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.