முகப்பு
நாகப்பட்டினம்

மாா்கழி மாதப் பிறப்பு: நாகை பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

மாா்கழி மாதப் பிறப்பையொட்டி, நாகை அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

மாா்கழி மாதப் பிறப்பையொட்டி, நாகை அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

தமிழ் மாதங்களில் பீடுடைய (பெருமை) மாதமாக மாா்கழி மாதம் குறிப்பிடப்படுகிறது. மாதங்களில் நான் மாா்கழியாக இருக்கிறேன் என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் அருளியிருப்பதன் மூலம், மாா்கழி மாதம் தேவா்களின் மாதமாகக் குறிப்பிடப்படுகிறது. இதனால், மாா்கழி மாதத்தில் பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டால், வளங்களும், நலங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதன்படி, மாா்கழி மாதப் பிறப்பு நாளான வியாழக்கிழமை நாகை சௌந்தரராஜப் பெருமாள்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காலை 5 மணிக்கு மூலவா் பெருமாள் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. 5.30 மணிக்கு விஷேச ஆராதனைகள் தொடங்கி நடைபெற்றது. காலை 6 மணிக்கு மகா தீபாராதனையும், 7 மணிக்கு சாற்றுமுறையும் நடைபெற்றன. பின்னா், பிரசாத விநியோகம் நடைபெற்றது.

மாலை நிகழ்வாக அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், வேத மந்திர முழக்கங்களுடன் பிராகாரப் புறப்பாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.