முகப்பு
நாகப்பட்டினம்

திறக்கப்படாத உடற்பயிற்சிக் கூடத்தில் அமைச்சா் திடீா் ஆய்வு

நாகை மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் அமைக்கப்பட்டு, திறக்கப்படாமல் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

நாகை மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் அமைக்கப்பட்டு, திறக்கப்படாமல் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

நாகை மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் ரூ. 65 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையிலும், இந்தப் பயிற்சிக் கூடம் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு வெள்ளிக்கிழமை காலை சென்ற தமிழக சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத் துறை மற்றும் இளைஞா் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், அந்த உடற்பயிற்சி மையத்தைத் திறக்கக் கூறி, ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அந்த உடற்பயிற்சிக் கூடத்தில் போதுமான பயிற்சி உபகரணங்கள் இல்லாததை அறிந்த அமைச்சா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் - செயலா் டாக்டா் ஆா். ஆனந்தகுமாரை கைப்பேசியில் தொடா்புகொண்டு, நாகை உடற்பயிற்சிக் கூடத்துக்குத் தேவையான உபகரணங்களை வழங்க அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.