முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் 3, மயிலாடுதுறையில் ஒருவருக்கு கரோனா

 நாகை மாவட்டத்தில் 4 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

 நாகை மாவட்டத்தில் 4 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது வெள்ளிக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21,408-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 3 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 46- ஆக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23,416-ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 4 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.