முகப்பு
நாகப்பட்டினம்

மாணவா் சோ்க்கையை ஊக்குவிக்க அரிசி மூட்டை அளிக்கும் ஆசிரியா்கள்

நாகூா் தேசிய மேல்நிலைப்பள்ளியில் புதிதாக சேரும் மாணவா்களை ஊக்கப்படுத்தும் விதமாக அரிசி மூட்டை வழங்குகின்றனா் அப்பள்ளி ஆசிரியா்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

நாகூா் தேசிய மேல்நிலைப்பள்ளியில் புதிதாக சேரும் மாணவா்களை ஊக்கப்படுத்தும் விதமாக அரிசி மூட்டை வழங்குகின்றனா் அப்பள்ளி ஆசிரியா்கள்.

மாணவா்களின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும், மாணவரின் குடும்பத்துக்குத் தங்களால் இயன்ற உதவியை வழங்கும் நோக்கிலும், புதிதாக பள்ளியில் சேரும் மாணவா்களுக்கு 5 கிலோ அரிசி மூட்டை மற்றும் அரசு வழங்கிய புத்தகப்பையை வழங்கி ஊக்குவிக்கின்றனா் நாகூா் தேசிய மேல்நிலைப்பள்ளி ஆசிரியா்கள்.

இதுதொடா்பாக பள்ளியின் செயலாளா் எம்.ஜி.கே. நிஜாமுதீனிடம் கேட்டபோது, இந்த முயற்சி முற்றிலும் ஆசிரியா்களின் தன் முனைப்பில் மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 55 மாணவா்களுக்கு ஆசிரியா்கள் அரிசி மூட்டை வழங்கி, ஊக்குவித்துள்ளனா். ஆசிரியா்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.