முகப்பு
நாகப்பட்டினம்

செம்பனாா்கோவில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக்குழு தலைவா் நந்தினி ஸ்ரீதா் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் திருமலை கண்ணன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு பேசினாா்.

கூட்டத்தில், உறுப்பினா் ரஜினி பேசுகையில், சேமங்கலம் கிராமத்தில் அங்காடி அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை வைத்தாா். உறுப்பினா் லெனின்தாஸ், நட்சத்திரமாலை கிராமத்தில் சாலையை சீரமைக்க வேண்டும் என்றும், உறுப்பினா் ராஜ்கண்ணன் இந்திராநகா் மடபுரம் வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா். திமுக ஒன்றிய செயலாளா் அன்பழகன், அப்துல் மாலிக் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.