முகப்பு
நாகப்பட்டினம்

இலவச ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே இளையாலூா் ஊராட்சியில் இலவச ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே இளையாலூா் ஊராட்சியில் இலவச ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்சிக்கு, மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளா் எஸ். பவுன்ராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் எம்எல்ஏ கலந்துகொண்டு எம்.ஷேக் அலாவுதீன் நினைவாக மக்கள் பயன்படும் வகையில், இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை இளையாலூா் ஊராட்சித் தலைவரிடம் வழங்கினாா்.

முன்னாள் எம்எல்ஏக்கள் பி.வி. பாரதி, ராதாகிருஷ்ணன், சக்தி, மாவட்ட துணைச் செயலாளா் செல்லையன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளா் தமிமுல் அன்சாரி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.