நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் உள்ள சொகுசு விடுதியில் வருமான வரித்துறையினர் சோதனை

DIN

நாகப்பட்டினம்:  நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள  எம்.ஜி.எம் சொகுசு விடுதியில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்திலுள்ள எம்.ஜி.எம் குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரைச் சாலையில் வேளாங்கண்ணி பேராலயம் நுழைவு வாயில் அருகே உள்ள எம்.ஜி.எம் நிறுவனத்துக்குச் சொந்தமான சொகுசு விடுதியில் 2 கார்களில் வந்த  4 பேர் கொண்ட  வருமானத்துறையினர்  புதன்கிழமை காலை 7  மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகள் முறையாக செலுத்தப்பட்டுள்ளதா? விடுதி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொகுசு விடுதியின் அனைத்து கதவுகளும்  அடைக்கப்பட்ட நிவையில், வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனை நடத்திவருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT