முகப்பு
நாகப்பட்டினம்

டிச. 12-ல் நாகைக்கு உள்ளூர் விடுமுறை!

நாகப்பட்டினத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 4 டிசம்பர், 2024 at 7:02 AM
நாகூர் தர்கா - கோப்புப்படம்
பகிர்:

நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு டிசம்பர் 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. முக்கிய நிகழ்வான சந்தனக் கூடு ஊர்வலம் டிசம்பர் 11ஆம் தேதி இரவு நடைபெறவுள்ளது. தொடர்ந்து, மறுநாள் காலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க : கஞ்சா வழக்கில் மன்சூர் அலிகான் மகன் கைது!

இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் 12ஆம் தேதி வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 21-ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.