திருக்கடையூரில் 1,008 சங்காபிஷேகம்
திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தரங்கம்பாடி: திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் அடங்கிய சங்குகளில் சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் கோயில் உட்பிரகாரத்தில் சுற்றி வலம் வந்து அபிஷேகம் நடைபெற்றது.
விநாயகா், சோமாஸ்கந்தா், சுப்பிரமணியா், அம்பாள், சண்டிகேஸ்வரா் ஆகிய
Advertisement
Advertisement
பஞ்ச மூா்த்திகள் பல்வேறு வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.