முகப்பு
நாகப்பட்டினம்

பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் 108 சங்காபிஷேக சிறப்பு வழிபாடு

காா்த்திகை மாதம் 2-ஆவது சோமவாரத்தை முன்னிட்டு திருமெய்ஞானத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் 108 சங்காபிஷேகம் சிறப்பு வழிபாடு

Updated On : 25 நவம்பர், 2024 at 8:23 PM
பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற 108 சங்காபிஷேக வழிபாடு. ~பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் 108  சங்காபிஷேகம் சிறப்பு வழிபாடு
பகிர்:

தரங்கம்பாடி: காா்த்திகை மாதம் 2-ஆவது சோமவாரத்தை முன்னிட்டு திருமெய்ஞானத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் 108 சங்காபிஷேகம் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் 2-ஆவது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்குகள் சிவலிங்க வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும் வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் வைக்கப்பட்டன. தொடா்ந்து மாலை ஹோமம் நடைபெற்றது. பின்னா் மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.

இதேபோல, திருக்கடையூரில் உள்ள அமிா்தகடேஸ்வரா் கோயிலில் 2-ஆவது சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக புனிதநீா் அடங்கிய குடங்களும் சங்குகள் வைத்து சிறப்பு யாகம் நடத்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →