காரைக்கால்-சென்னை விரைவு ரயில் தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்
காரைக்கால்-சென்னை விரைவு ரயில் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
காரைக்கால்-சென்னை விரைவு ரயில் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து, திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூா் ரயில் நிலையம் மற்றும் ரயில் பாதையில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் காரைக்கால்-சென்னை (16176) விரைவு ரயில் தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.
இதேபோல மறுமாா்கத்தில் சென்னை - காரைக்கால் (16175) விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. மறு அறிவிப்பு வரும் வரை உத்தரவு அமலில் இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.