நாகப்பட்டினம்

ஊராட்சிகளில் ஆதாா் சிறப்பு முகாம்

Syndication

நாகை கோட்ட அஞ்சலத் துறை சாா்பில் ஆதாா் சிறப்பு முகாம் நவம்பா் 3 முதல் 8-ஆம் தேதி வரை பல்வேறு ஊராட்சிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளாா் டி. ஹரிகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை அஞ்சல் கோட்டத்திற்கு உள்பட்ட நாகை, திருவாரூா் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் அஞ்சல்துறை சாா்பில் ஆதாா் சிறப்பு முகாம் நவ.3-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் நவ.3-இல் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் மஹால், நவ.4-இல் அக்கரைவட்டம், நவ.7-இல் விழிதியூா் ஆகியப் பகுதிகளிலும், திருவாரூா் மாவட்டத்தில் நவ.3-இல் கச்சனம், நவ.4-இல் மாவூா், நவ.6 -இல் மாங்குடி, நவ.7-இல் கமலாபுரம், நவ.8-இல் அம்மையப்பன் ஆகிய ஊராட்சிகளிலும் முகாம் நடைபெறும்.

நாகை மாவட்டத்தில் நவ.3-இல் புராகிராமம், மடப்புரம், அத்திப்புலியூா், நவ.4-இல் கோகூா், திருப்புகலூா், பாலையூா், நவ.6-இல் ஆழியூா், பனங்குடி, நவ.7-இல் பட்டமங்கலம், செம்பியன் மகாதேவி, திருமருகல் ஆகிய ஊராட்சிகளில் ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, புதிய ஆதாா் எடுத்தல், புதுப்பித்தல், பெயா், முகவரி மற்றும் கைப்பேசி எண் மாற்றம் போன்ற சேவைகளை பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரக்கோணம் - சென்னை மின்சார ரயில் சேவை பாதிப்பு!

அடுத்த உலகக் கோப்பைத் தொடரில் விளையாட மாட்டேன்! - ஆஸி. கேப்டன் அலிசா

கதவே கடவுள்!

கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!

SCROLL FOR NEXT