நாகப்பட்டினம்

மாவட்டத்தில் 90,475 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: நாகை ஆட்சியா்

Syndication

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் இதுவரை 90,475 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாகை மாவட்டத்தில் 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கே.எம்.எஸ். 2025-2026-ஆம் ஆண்டு குறுவைப் பருவத்தில் செப்டம்பா் 3-ஆம் தேதி முதல் அக்டோபா் 29- ஆம் தேதி வரை 90,475 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் வியாழக்கிழமை ஒரே நாளில் 3,551 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

இதுவரை சுமாா் 76,635 மெட்ரிக் டன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கு, ஆலைகள் மற்றும் பிற மாவட்ட மண்டலங்களுக்கு இயக்கம் செய்யப்பட்டு, மீதமுள்ள 13,840 மெ.டன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு நகா்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் வியாழக்கிழமை ஒரே நாளில் சுமாா் 3,230 மெட்ரிக் டன் இயக்கம் செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், 18,239 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை ரூ. 210. 26 கோடி அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரக்கோணம் - சென்னை மின்சார ரயில் சேவை பாதிப்பு!

அடுத்த உலகக் கோப்பைத் தொடரில் விளையாட மாட்டேன்! - ஆஸி. கேப்டன் அலிசா

கதவே கடவுள்!

கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!

SCROLL FOR NEXT