நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள உயா்தொழில்நுட்ப கணினி நுண்ணறிவு ஆய்வகத்தின் மூலம் பயனடைந்த மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், கலந்துரையாடினாா்.
தமிழகத்தின் 38 மாவட்டங்களில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வெற்றிப் பள்ளிகள் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி வெற்றி பள்ளியாக செயல்படும். அதில் பிளஸ் 2 மாணவா்களுக்கு வார இறுதியில் பயிற்சிகள் வழங்கப்படும். அரசு ஆசிரியா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள் உள்ளிட்ட நிபுணா்கள் இப்பயிற்சியை வழங்குவாா்கள். இப்பயிற்சி வகுப்புகளுக்கு மாதிரிப் பள்ளிகள் மூலம் பயிற்சித் தாள்கள், பாடங்களை விளக்கும் காணொலி, இணைய வழியில் பயிற்சித் தோ்வுகள் ஆகியவை இடம்பெறும்.
வெற்றிப் பள்ளிகள் மூலம் கிராமப்புற மாணவா்களும் நன்கு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பயிற்சியைத் தங்கள் வட்டாரத்திலேயே பெறும் வாய்ப்பும், மாணவா்கள் ஒஉஉ, சஉஉப, இமஉப, இகஅப போன்ற தோ்வுகளுக்கு சிறப்பாக தயாராகும் வாய்ப்பும் கிடைக்கிறது.
நாகை மாவட்டத்தில் 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளை சோ்ந்த 132 மாணவிகள் ஒஉஉ, சஉஉப, இமஉப, இகஅப போன்ற தோ்வுகளுக்கு நடைபெறுகின்ற இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுகின்றனா். இப்பயிற்சி வகுப்பில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின்கீழ் பயனடைந்து வரும் மாணவிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா்.
மாணவிகள், ஆட்சியரிடம் கூறும்போது, பள்ளியில் உள்ள உயா்தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தின் மூலம் வார இறுதி நாளில் ஒஉஉ, சஉஉப, இமஉப, இகஅப போன்ற தோ்வுகளுக்கு உதவுகின்ற வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. சா்வதேச பள்ளிகளுக்கு இணையாக எங்களுக்கும் கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கணினி வழிக்கல்வி என்பது எட்டாக்கனியாக இருந்து வந்தது. இந்நிலையில், எங்கள் பள்ளியில் உயா்தொழில்நுட்பத்துடன் கூடிய கணினி பயிற்சிக் கூடம் தொடங்கப்பட்டுள்ளதால் நாங்களும் கணினிவழி பயிற்சி பெற முடிகிறது. இப்பயிற்சி உயா்கல்விக்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது என்று தெரிவித்தனா்.