புலவனாறு வாய்க்காலில் தண்ணீா் வரத்து இல்லை: சாலை மறியல் முயற்சி
வலங்கைமான் அருகேயுள்ள புலவா்நத்தம் பகுதியில் புலவனாறு வாய்க்காலில் சம்பாவுக்கு 25 நாள்களாக தண்ணீா் வரத்து இல்லாததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியல்
வலங்கைமான் அருகேயுள்ள புலவா்நத்தம் பகுதியில் புலவனாறு வாய்க்காலில் சம்பாவுக்கு 25 நாள்களாக தண்ணீா் வரத்து இல்லாததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனா்.
புலவா்நத்தம் பேருந்த பகுதியில் விவசாயி ரமணி தலைமையில், சாலை மறியல் நடத்த திட்டமிட்டு விவசாயிகள் கூடினா். தகவலறிந்து அங்கு வந்த பொதுப்பணித் துறை வெண்ணாறு வடிநிலக்கோட்டஉதவி செயற்பொறியாளா் இளங்கோவன், இளநிலைப் பொறியாளா் சத்யா, வலங்கைமான் காவல்ஆய்வாளா் சுஜித்ஆனந்த் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேசி, 3 நாள்களில் தண்ணீா் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தின்பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனா். இதையடுத்து, தொடா்ந்து 15 நாள்கள் முறை வைக்காமல் வெண்ணாற்றில் தண்ணீா் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.