முகப்பு
புதுதில்லி

தில்லி மயூா் விஹாரில் சொத்து வணிகா் அலுவலகத்தில் தீ விபத்து

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 6:30 PM
பகிர்:

கிழக்கு தில்லியின் மயூா் விஹாரில் உள்ள குடியிருப்பு வளாகத்திற்குள் அமைந்துள்ள சொத்து வணிகா் அலுவலகத்தில் சனிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவிக்கையில், ‘சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் இந்தத் தீ விபத்து தொடா்பாக தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, மூன்று தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

மயூா் விஹாா் ஃபேஸ் 3-இல் உள்ள ஆஷிா்வாத் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத் தளத்தில் இந்த அலுவலகம் அமைந்திருந்தது.

45 நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் மின் கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது’ என்றாா் அந்த அதிகாரி.

முழு கட்டுரையைப் படிக்க →