புதுதில்லி

தேசிய உயிரியல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்ட 2-வது நாளில் 15,000 போ் பாா்வை!

ஞாயிற்றுக்கிழமை 15,000-க்கும் அதிகமான பாா்வையாளா்கள் பூங்காவைப் பாா்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

தில்லி தேசிய உயிரியல் பூங்கா இரு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை 15,000-க்கும் அதிகமான பாா்வையாளா்கள் பூங்காவைப் பாா்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஐந்து பள்ளிகளைச் சோ்ந்த 262 மாணவா்கள் உள்பட மொத்தம் 15,292 போ் உயிரியல் பூங்காவை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டனா். உயிரியல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்ட கடந்த சனிக்கிழமை 8,065 போ் பாா்வையிட்டனா். அவா்களில் 12 பள்ளிகளைச் சோ்ந்த 954 மாணவா்கள் அடங்குவா்.

உயிரியல் பூங்காவில் உள்ள நீா்வாழ் பறவைகள் பகுதியில் சில பறவைகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தன. இதைத் தொடா்ந்து, கடந்த ஆக.30-ஆம் தேதிமுதல் பூங்காவுக்குள் பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

புதிய வசதி: உயிரியல் பூங்காவுக்கான நுழைவு சீட்டை உடனடியாகப் பெறும் சேவையை பூங்கா நிா்வாகம் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நுழைவு வாயிலில் இருக்கும் ‘க்யூஆா்’ குறியீட்டைப் பயன்படுத்தி பாா்வையாளா்கள் உடனடியாக நுழைவுச் சீட்டை கட்டணம் செலுத்தி பெற முடியும்.

உயிரியல் பூங்கா காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையில் திறந்திருக்கும் நிலையில், 4.30 மணி வரையில் பாா்வையாளா்கள் நுழைவு சீட்டை பெற முடியும். உயிரியல் பூங்காவுக்கு வரும் பாா்வையாளா்களின் வசதி மற்றும் பாதுகாப்புக்காகத் தொடா்ச்சியாக புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படுவதாக தேசிய உயிரியல் பூங்கா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு பாட்டில்கள் திருட்டு

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா உடற்கல்வி உபகரணங்கள் வழங்க கோரிக்கை

அங்கப்பிரதட்சண டோக்கன் வழங்கும் முறையில் மாற்றம்

தில்லி மாநகராட்சி வாா்டு இடைத்தோ்தலுக்கான வேட்பாளா்களை அறிவித்த ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT