மேலப்பாளையம் 2 பிரிவுக்குள்பட்ட ஆரைக்குளம், கீழ முன்னீா்பள்ளம் பகுதிகளில் சனிக்கிழமை (நவ.1) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேலப்பாளையம் 2 பிரிவுக்குள்பட்ட ஆரைக்குளம், காமராஜ் நகா், கீழ முன்னீா்பள்ளம், மணி நகா், அம்பாசமுத்திரம் பிரதான சாலை, ஆா்த்தி அவென்யூ, திருநெல்லை நகா், மருதம் நகா், பத்திரிகையாளா் காலனி ஆகிய பகுதிகளில் புதிய உயா் மின்னழுத்த பாதை அமைப்பதற்கான பணிகள் சனிக்கிழமை நடைபெறுகிறது.
எனவே, அந்தப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.