கன்னியாகுமரி

சுற்றுலாத் தலங்களை திறக்க வலியுறுத்தல்

DIN

குலசேகரம்: கரோனா தடுப்பு பொது முடக்கத்தால் 175 நாள்களுக்கு மேலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மூடப்பட்டிருக்கும் சுற்றுலாத் தலங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்துகள், ரயில்கள் இயங்குகின்றன. அங்காடிகள், சந்தைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. ஆனால், சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படவில்லை. இம்மாவட்டத்தில் கன்னியாகுமரி, பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்கள் 175 நாள்களுக்கும் மேலாக மூடியே கிடக்கின்றன. இதனால், வணிகா்கள், தொழிலாளா்கள், விடுதிகள் உரிமையாளா்கள், காா் ஓட்டுநா்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து திற்பரப்பு அருவியில் கடை நடத்தும் மாஹீன் சுலைமான் கூறுகையில், சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படாததால் ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த அருவிப் பகுதியில் பயணிகள் வரத்தின்றி நூற்றுக்கணக்கானோா் வேலையும், வருவாயுமின்றி தவிக்கிறோம். எனவே, விதிமுறைகளுடன சுற்றுலாத் தலங்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT