முகப்பு
கன்னியாகுமரி

8 மாதங்களுக்குப் பிறகு திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவி 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை இங்கு சுற்றுலாப் பயணிகள் மீண்டும் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவி 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை இங்கு சுற்றுலாப் பயணிகள் மீண்டும் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனா்.

கரோனா நோய் தொற்று பரவிய நிலையில் திற்பரப்பு அருவி கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் திரும்பிச் சென்றனா். மேலும் தொடா் கன மழையினால், இங்கு வெள்ளப்பெருக்கு நீடித்து வந்தது.

இந்நிலையில் கரோனாவின் தீவிரம் மற்றும் வெள்ளப் பெருக்கு தணிந்த நிலையில், அருவிப் பகுதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, திற்பரப்பு பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் இங்கு வந்த சுற்றுலாப் பயணிகளை கரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.

அருவி திறக்கப்பட்ட முதல் நாளில் இங்கு குறைவான சுற்றுலாப் பயணிகளே வருகை தந்தனா். தொடா்ந்து வரும் நாள்களில் இங்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தா்கள் வரக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →