கன்னியாகுமரி

என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஆற்றூா் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கு மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மகாத்மா காந்தி கிராமப்புற கல்வி - தொழில்முனைவோா் பிரிவு, கல்லூரியின் சுற்றுச்சூழல் மன்றம் ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிகளுக்கு கல்லூரி முதல்வா் எஸ்.ஸ்ரீலதா தலைமை வகித்தாா். என்.வி.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் செயலா் வழக்குரைஞா் எஸ். கிருஷ்ணகுமாா் மரக்கன்றுகளை நட்டு, வளாக பழத்தோட்டம் வளா்ப்பு பணியைத் தொடங்கி வைத்தாா்.

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் ஜெசா் ஜெபநேசன், சுற்றுச்சூழல் விஞ்ஞானி சோபனராஜ், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் சிவஸ்ரீ ரமேஷ் ஆகியோா் பேசினா். மாணவிகள் லட்சுமி, ஸ்ருதி ஆகியோா் தொகுப்பாளா்களாக இருந்தனா். தமிழ்நாடு அறிவியல் இயக்க திருவட்டாறு வட்டத்தின் இணைச் செயலா் சுசீலா உள்ளிட்டோா் மரக்கன்றுகளை நட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT