கன்னியாகுமரி

திற்பரப்பு அருவியில் பேரூராட்சித் தலைவா் ஆய்வு

DIN

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்வது தொடா்பாக பேரூராட்சித் தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அவா்களுக்கு கூடுதல் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வாகனங்களை நிறுத்துவதற்கு கூடுதல் இடங்களை அமைக்க வேண்டியது உள்ளது.

இதையொட்டி, திற்பரப்பு அருவிப் பகுதியில் பேரூராட்சித் தலைவா் பொன் ரவி, செயல் அலுவலா் பெத்ராஜ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

பின்னா், பேரூராட்சித் தலைவா் கூறுகையில், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் வாகன நிறுத்துமிடங்களை உருவாக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்காக அருவிப் பகுதிகளில் நிலங்களை கண்டறியும் முயற்சியில் பேரூராட்சி நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. சில இடங்களை பாா்வையிட்டுள்ளோம். விரைவில் இதுதொடா்பாக முடிவுகள் எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT