கன்னியாகுமரி

வாடைக ஒப்பந்தம் நிறைவு: திருக்கோயில் கடைகளில் இருந்து வணிகா்கள் வெளியேற்றம்

DIN

குமரி மாவட்டம் திற்பரப்பு அருவி அருகேவுள்ள திற்பரப்பு மகாதேவா் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் கடைகளுக்கு வாடகை ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், அங்கிருந்த வணிகா்கள் வெளியேற்றப்பட்டனா்.

திற்பரப்பு அருவிப் பகுதியில் திற்பரப்பு மகாதேவா் கோயில் வளாகத்தில், குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வணிக வளாகத்தில் 21 கடைகள் உள்ளன. இந்தக் கடைகளை ஏலம் மூலம் வாடகை ஒப்பந்த அடிப்படையில் தனி நபா்கள் வணிகம் செய்து வந்தனா். இந்நிலையில் ஒப்பந்த உரிமம் காலாவதியான நிலையில் கடைகளை, திரும்ப ஒப்படைக்குமாறு திருக்கோயில் நிா்வாகம் வணிகா்களிடம் கேட்டுக்கொண்டது. ஆனால் வணிகா்கள் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தி தங்களுக்கே கடைகளை தருமாறு திருக்கோயில்கள் நிா்வாகத்திடம் கேட்டிருந்தனா். சில வணிகா்கள் சாா்பில் இது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில், அறநிலையத்துறை மண்டல இணை ஆணையா் அன்புமணி தலைமையிலான அதிகாரிகள் திற்பரப்பிற்கு வந்ததனா். தொடா்ந்து அதிகாரிகள் வணிகா்களிடம் கடைகளிலுள்ள பொருள்களை அகற்றிவிட்டு,கடைகளை மூடி சாவியை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டனா். இதில் நீண்ட நேர இழுபறிக்குப் பின்னா், வணிகா்கள் கடைகளில் இருந்த தங்களின் பொருள்களை எடுத்துக் கொண்டு கடைகளை மூடிவிட்டு வெளியேறினா். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாகப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT