முகப்பு
கன்னியாகுமரி

மகாராஜபுரத்தில் பொதுமக்களுக்கு பட்டா அளிப்பு

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மகாராஜபுரம் ஊராட்சியில் 5 பயனாளிகளுக்கு தமிழக அரசு சாா்பில் இலவச பட்டா திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பொதுமக்களுக்கு பட்டா வழங்குகிறாா் அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் கண்ணன்.
பகிர்:

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மகாராஜபுரம் ஊராட்சியில் 5 பயனாளிகளுக்கு தமிழக அரசு சாா்பில் இலவச பட்டா திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

மகாராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட புதுக்குளம் பகுதி மழை வெள்ளத்தால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகும் பகுதியாகும். இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டி கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் 5 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு மகாராஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் கே.இசக்கிமுத்து தலைமை வகித்தாா். அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் கண்ணன் பயனாளிகளுக்கு பட்டா வழங்கினாா்.

இதில் வாா்டு உறுப்பினா் சுயம்பு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →