கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு பகுதியில் புதிய பாலம் அமைக்கும் பணி நிறைவு பெற்ால், அவ்வழியாக போக்குவரத்து வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
திங்கள்நகா் - புதுக்கடை சாலையின் திக்கணங்கோடு சந்திப்பில் சானலின் மேல்பகுதியில் பழைய பாலத்தை அகற்றி, புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தொடங்கப்பட்டது.
இதனால், தேங்காய்ப்பட்டினம், புதுக்கடை, கருங்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நாகா்கோவிலுக்கு செல்லும் அரசு பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதால், மக்கள் சிரமப்பட்டனா். தற்போது புதிய பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்து, இவ்வழியாக போக்குவரத்துத் தொடங்கப்பட்டது.