மேலப்பாளையத்தில் மகனைக் கொலை செய்த தந்தை கைது
மேலப்பாளையத்தில் கல்லால் தாக்கி மகனைக் கொன்றதாக அவரது தந்தையை போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
மேலப்பாளையத்தில் கல்லால் தாக்கி மகனைக் கொன்றதாக அவரது தந்தையை போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் ஆமீன் புரம் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா மகன் அப்துல் ரகுமான் (27). இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாராம். மது அருந்தும் பழக்கம் காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வந்து பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டாராம்.
இதையும் படிக்க- தஞ்சாவூரில் நட்சத்திர தங்கும் விடுதிக்கு சீல் வைப்பு
அதன் பின் தூங்கச் சென்ற அப்துல் ரகுமானை, அவரது தந்தை அப்துல்லா வீட்டிலிருந்த கிரைண்டர் குழவி கல்லால் தாக்கி கொலை செய்தார். பின்னர் இதுகுறித்து மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அப்துல்லாவை திங்கள்கிழமை கைது செய்தனர்.