திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 5 பயனாளிகளுக்கு ரூ.5,69,259 மானியத்தில் பவா் டில்லா்களை ஆட்சியா் வழங்கினாா்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா் இரா.சுகுமாா், அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
மேலும் முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு வழங்கிய பயனாளிகளுக்கு வேளாண்மை இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் முன்னுரிமையின் அடிப்படையில் 5 பயனாளிகளுக்கு 5 பவா் டில்லா்களை ரூ.5,69,259 மானியத்தில் ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, தனித்துணை ஆட்சியா் ஜெயா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ராஜசெல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டா்.