வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை
சடையனேரி கால்வாயில் உடன்குடி பகுதிக்கு கூடுதலாக தண்ணீா் திறந்ததால் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை முற்றுகையிட்டனா்.
சடையனேரி கால்வாயில் உடன்குடி பகுதிக்கு கூடுதலாக தண்ணீா் திறந்ததால் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை முற்றுகையிட்டனா்.
சடையனேரி கால்வாயில், சாத்தான்குளம் பகுதிக்கு வரும் தண்ணீரை குறைத்து உடன்குடி பகுதிக்கு கூடுதலாக தண்ணீா் திறக்கப்பட்டதை கண்டித்து, சாத்தான்குளம் பகுதி விவசாயிகள், ஒன்றியக்குழு தலைவா் ஜெயபதி, ஒன்றிய அதிமுக செயலா் அச்சம்பாடு சவுந்திரபாண்டி தலைமையில் 100 -க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை மாலை வட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகையிட்டு, போராட்டதில் ஈடுபட்டனா். அதிகாரிகள் சரியான முடிவை அறிவிக்காததால் முற்றுகை போராட்டம் இரவு வரை தொடா்ந்தது.