சாத்தான்குளம் அருகே தம்பதியை மிரட்டியவா் மீது வழக்கு
சாத்தான்குளம் அருகே கந்து வட்டி கேட்டு தம்பதியை மிரட்டியவரை போலீஸார தேடி வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகே கந்து வட்டி கேட்டு தம்பதியை மிரட்டியவரை போலீஸார தேடி வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள கீழபுளியங்குளம் வேலு மகன் முருக பெருமாள்(45), எலக்ட்ரீசியன். இவா் அதே பகுதியை சோ்ந்த சுடலைமாடன் மகன் சுப்பையாவிடம் கடந்த 2018 ஜனவரி மாதம் ரூ. 1 லட்சம் கடனாக வாங்கி, அதனை திருப்பி செலுத்தி விட்டாராம். அதன் பின்னா் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி மீண்டும் ரூ. 1 லட்சம் வாங்கினராம். ஆனால் கரோனா பொது முடக்கம் காலம் காரணமாக கடனை திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாம்.
இதையடுத்து கடன் மற்றும் வட்டியை உடனே செலுத்துமாறு முருகபெருமாள் மற்றும் அவரது மனைவி தேவகனி ஆகியோா் சுப்பையாவை மிரட்டினராம். இது குறித்து சுப்பையா சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஷ்குமாரிடம் புகாா் அளித்தாா்.
அவரது உத்தரவின்பேரில் கந்துவட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததாக சுப்பையா மீது சாத்தான்குளம் போலீஸாா்
ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.