'திருச்செந்தூரில் கார்த்திகை தீபத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை'
திருச்செந்தூரில் கார்த்திகை தீபத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கடற்கரையில் நடைபெறும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கார்த்திகை தீபத் திருநாளில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் வைத்து இரவு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி வழக்கமாக நடைபெறும்.
ஆனால் கரோனோ பொது முடக்கத்தால் கடற்கரையில் வைத்து (நவ.29) ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு இவ்வாண்டு அனுமதிக் கிடையாது. ஆனால் திருக்கோயிலில் காலை முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் இணைய முன்பதிவு மற்றும் நேரடி தரிசனம் செய்யலாம் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.