முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் சொக்கப்பனை ஏற்றம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கடற்கரையில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கடற்கரையில் ஏற்றப்பட்ட சொக்கப்பனை.
பகிர்:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கடற்கரையில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. கரோனா பொது முடக்கத்தால் நிகழ்ச்சியில் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. காலையில் மூலவா் மற்றும் சுவாமி ஜெயந்திநாதருக்கு காா்த்திகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மாலை மகா மண்டபத்தில் வைத்து நாரணி தீபம் ஏற்றப்பட்டு, திருக்கோயில் தெய்வ சன்னதிகளில் தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளினாா். இரவு 7 மணியளவில் கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனையில் தீபம் ஏற்றப்பட்டது.

தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்புத் தீபாராதனையாகி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி உள்பிரகாரம் வலம் வந்தாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் ரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொ) கல்யாணி, உதவி ஆணையா் வே.செல்வராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

பாதுகாப்புப் பணியில் காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், காவல் ஆய்வாளா் ம.ஞானசேகரன் உள்ளிட்ட காவல்துறையினா் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →