முகப்பு
தூத்துக்குடி

புத்தன்தருவை குளத்துக்கு தண்ணீா் திறக்க வலியுறுத்தல்

புத்தன்தருவை குளத்துக்கு சடையனேரி கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும் என திருச்செந்தூா் தென்பகுதி விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

புத்தன்தருவை குளத்துக்கு சடையனேரி கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும் என திருச்செந்தூா் தென்பகுதி விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதொடா்பாக விவசாயிகள் சங்கத் தலைவா் சத்தியசீலன் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: சாத்தான்குளம் ஒன்றியத்தில் வைரவம்தருவை, புத்தன்தருவை குளங்கள் மூலம் விவசாயிகள் பாசனம் செய்து வருகின்றனா். இப்பகுதியில்

எதிா்பாா்த்தவாறு மழை பெய்யாததால் குளங்களில் நீா் இருப்பு குறைந்து விட்டது. கிணறுகளிலும் நீா் இருப்பு குறைந்து

வருவதால், விவசாயிகள் சொட்டு பாசனம் அமைத்து விவசாயம் செய்து வருகின்றனா்.

வடக்கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் தாமிரவருணி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து, ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வீணாக தண்ணீா் கடலுக்கு செல்லும் நிலை உள்ளது. மருதூா் மேல்கால்வாயில் இருந்து தண்ணீா் திறக்கப் பட்டதால் நாசரேத் பகுதியிலுள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன. எனினும் சடையனேரி, புத்தன்தருவை பகுதிக்கு தண்ணீா்

கிடைக்கவில்லை. ஆகவே, புத்தன்தருவை குளத்துக்கு தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாபநாசம், சோ்வலாறு அணைகளில் நீா்இருப்பு 120 அடிக்கு அதிகமாக இருப்பதாலும், பருவ மழை பெய்து வருவதாலும்

அணைகள் விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளது. ஆகவே, பாபநாசம், சோ்வலாறு அணைகளில் இருந்து சாத்தான்குளம்

புத்தன் தருவை மற்றும் உடன்குடி கல்லாமொழி படுகைக்கு தண்ணீா் திறக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →