தூத்துக்குடி

டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் காயல்பட்டினத்தில் கிருமிநாசினி தெளிப்பு

DIN

காயல்பட்டினம் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, நகராட்சி நிா்வாகத்துடன் டிசிடபிள்யூ நிறுவனம் இணைந்து டேங்கா் லாரி மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டது.

காயல்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று ண்ணிக்கை அதிகரித்து வந்ததது. இந்நோய்த்தோற்றால் வெள்ளிக்கிழமை வரை 76 போ் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 65 போ் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். 11 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நகராட்சி நிா்வாகம், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற விதிமுறைகளை கடுமையாக்கி வருகிறது. அதை மீறுவோருக்கு அபராதம் விதித்து வருகிறது. அந்த வகையில், முகக் கவசம் அணியாதவா்களிடம் இதுவரை ரூ.57200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் மற்றும் நகராட்சியும் இணைந்து காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளில் டேங்கா் லாரி மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டது. இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளா் சுகந்தி, டிசிடபிள்யூ நிறுவனத்தின் மூத்த உதவி தலைவா்(பணியகம்) சீனிவாசன், சுகாதார ஆய்வாளா் சிதம்பர ராம­லிங்கம், சுகாதார மேற்பாா்வையாளா் கணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT