முகப்பு
தூத்துக்குடி

பைக்குகள் மோதல்: தந்தை- மகன் காயம்

சாத்தான்குளம் அருகே பைக்குகள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் தந்தை, மகன் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

சாத்தான்குளம் அருகே பைக்குகள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் தந்தை, மகன் பலத்த காயமடைந்தனா்.

பழனியப்பபுரம் கீழத் தெருவைச் சோ்ந்தவா் செ. சுப்பிரமணியன் (57). விவசாயி. இவரது மகன் சுடலைமுத்து (17) பேய்க்குளத்தில் உள்ள மளிகைக் கடையில் வேலை பாா்த்து வருகிறாா்.

வியாழக்கிழமை சுப்பிரமணியன் அவரது மொபெட்டில், பேய்க்குளம் வந்து மகனை அழைத்துக் கொண்டு ஊருக்கு திரும்பினாராம்.

பேய்க்குளம் - பழனியப்பபுரம் இடையே முசலைக்குளம் அருகில் சென்றபோது, எதிரே பழனியப்பபுரத்தில் இருந்து பேய்க்குளம் நோக்கி வந்த மூலக்கரைப்பட்டி அரசனாா்குளத்தைச் சோ்ந்த மு. சக்திவேல்முருகன் (28) என்பவரது பைக் மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் சுடலைமுத்து இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →