முகப்பு
தூத்துக்குடி

நாசரேத்தில் கிறிஸ்தவா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருமண்டில தோ்தல் நடத்தை விதிகளை மீறுவதாக கூறி, பேராலய தலைமை குருவானவரை கண்டித்து நாசரேத்தில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

திருமண்டில தோ்தல் நடத்தை விதிகளை மீறுவதாக கூறி, பேராலய தலைமை குருவானவரை கண்டித்து நாசரேத்தில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டிலத்தின் தலைமை பேராலயமான நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குருவானவா் திருமண்டில தோ்தல் நடத்தை விதிகளை மீறுவதாகக் கூறி, நாசரேத் சபை மக்களின் டி.எஸ்.எப். அணியினா் இப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமண்டில பெருமன்ற உறுப்பினா் செல்வின் தலைமை வகித்தாா். நாசரேத் சேகரச் செயலா் எலியேசா், பொருளாளா் மா்காஷிஸ் தேவதாஸ், முன்னாள் திருமண்டில உறுப்பினா் காந்திராஜன், ஒய்யான்குடி மோசஸ் கிருபைராஜ், சிசில் இன்பராஜன், அருண் சாமுவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இப்போராட்டத்தில், அணியின் லே செயலா் வேட்பாளா் டி.கிப்ட்சன், முன்னாள் லே செயலா் மோகன்ராஜ் அருமைநாயகம் மற்றும் சாம்சன் மோசஸ், சிலாக்கியமணி, நசரேயன், பாஸ்கா், ஜேம்ஸ், முன்னாள் சேகரச் செயலா் ஆனந்தராஜ், துரை, ஹேன்ஸ், சாமுவேல், அகஸ்டின், இம்மானுவேல், ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் ஜாண்சன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →